Mayasabha: புதிய வெப் சீரீஸில் நடிக்கும் நாக் சைதன்யா

Mayasabha web series to cast naga Chaitanya

தெலுங்கு இளம் நடிகரான நாகசைதன்யா சில மாதங்களுக்கு முன்பு நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து மீண்டும் நடிப்பில்  கவனம் செலுத்த துவங்கியுள்ள நாக சைதன்யா நடிப்பில் உருவான தண்டேல் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஓரளவு நல்ல வரவேற்பையும் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது புதிதாக உருவாகி வரும் Mayasabha என்கிற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார் நாகசைதன்யா.

இந்த வெப் சீரிஸை தற்போது ராஜமவுலி – மகேஷ் பாபு இருவர் கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு வசனம் எழுதி வரும் வசனகர்த்தாவான தேவகட்டா இயக்கியுள்ளார்.

Mayasabha web series to cast naga Chaitanya

Mayasabha web series

கிட்டத்தட்ட 400 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்த வெப் சீரிஸ் வெளியாகும் என தேவகட்டா கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக நாகசைதன்யா 2023ல் விக்ரம் கே குமார் இயக்கத்தில் உருவான தூதா என்கிற வெப் சீரிஸில் முதன்முறையாக நடித்திருந்தார்.

அந்த வெப் சீரிஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஒரு பக்கம் திரைப்படம் இன்னொரு பக்கம் வெப்சீரிஸ் என இரண்டுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளாராம் நாகசைதன்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *