Veera Dheera Sooran OTT முக்கிய தகவல்

விக்ரம் நடித்து அருண் குமார் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படமான ‘வீர தீர சூரன்’ ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்தது.
விக்ரம் நடிப்பு இந்த படத்தில் பெரிதும் பாராட்டப்பட்டது. வருகிற ஏப்ரல் 24 இல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் Veera Dheera Sooran OTT வெளியாக உள்ளது.
இந்த படத்தை ஓடிடியில் வெளியிட ஹாட்ஸ்டார் நிறுவனம் தான் முதலில் அணுகியது. விலை ஒத்து வராததால் அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளது.
Veera Dheera Sooran OTT Update
இந்த படத்தை அமேசான் ஓடிடி நிறுவனம் GST உட்பட 25 கோடிக்கு மட்டுமே வாங்கியதாம். இதனால் எதிர்பார்த்த விலைக்கு படம் விற்கவில்லையே என்ற ஆதங்கத்தில் படக்குழுவினர் இருப்பதாக சொல்லப்படுகிறது.
பெரும்பாலும் முன்னணி நடிகர்கள் படம் என்றாலே குறைந்தது 40 கோடிக்கு மேல் விலை போவது தான் வழக்கம்.
அனால், இந்த படத்தை வெறும் 25 கோடிக்கு வாங்கியது விக்ரம் ரசிகர்கள் மத்தியில் விரக்தியை உருவாகியுள்ளது.