Vijay: சென்னை திரும்பினார் விஜய்

வினோத் இயக்கத்தில் தளபதி Vijay நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.
அங்கு, இப்படத்தின் முக்கியமான பிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படப்பிடிப்புக்கு முன்பே மதுரை விமான நிலையத்தில் தனது ரசிகர்களை சந்தித்தார் விஜய்.
கொடைக்கானலுக்கும் ரசிகர்கள் படையெடுத்ததால், படப்பிடிப்பு நடைபெற்ற கட்டிடத்தின் மேலே நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்தார் விஜய்.
இந்நிலையில், அங்கு 5 நாள் படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில், இன்று கொடைக்கானலில் இருந்து கார் மூலம் மதுரை வந்தார் விஜய்.
பின்னர் தனி விமானம் மூலம் சென்னை திருப்பி உள்ளார் விஜய். முன்னதாக கொடைக்கானலில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பும் வழியில்,
விஜய்க்கு அம்மன் படத்தை பரிசாக கொடுத்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.