Goundamani: நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்

Goundamani wife passed away

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் Goundamani. இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ‛16 வயதினிலே’ மூலம் பிரபலமானார்.

செந்தில் உடன் இவர் நடித்த காமெடிகள் இன்றும் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது. சிவாஜி துவங்கி இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் வரை நடித்து வரகிறார்.

கவுண்டமணி தன் மனைவி சாந்தியை காதல் திருமணம் செய்தார். சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாந்தி இன்று(மே 5) சென்னையில் காலமானார்.

Goundamani wife passed away

Goundamani wife passed away

கவுண்டமணி – சாந்தி தம்பதியருக்கு 2 மகள்கள் உள்ளனர். சாந்தியின் உடல் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இறுதிச்சடங்கு நாளை(மே 6) காலை 11.30 மணி அளவில் பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *