Ilayaraja நோட்டீஸ் : GBU தரப்பு பதில் என்ன?

Ilayaraja issue legal notice to gbu team

அஜித் குமார் நடித்து கடந்த வாரம் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. தமிழ் நாட்டில் இப்படம் 100 கோடி வசூலைப் பெற்றுள்ளது.

இந்த படத்தில் Ilayaraja இசையமைத்த சில பாடல்களை பயன்படுத்தியுள்ளனர். அதற்கு தன்னிடம் அனுமதி வாங்காமல் பாடல்களை பயன்படுத்தியுள்ளதாக தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

5 கோடி நஷ்ட ஈடு, மன்னிப்பு, பாடல்களை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்.

இளையராஜா சார்பில் பேசிய  வழக்கறிஞர்கள், அவரது அனுமதி இல்லாமல் பாடலை உருமாற்றம் செய்திருக்கிறார்கள். காப்புரிமை சட்டத்தின்படி அது தவறு என்று தெரிவித்துள்ளார்கள்.

Ilayaraja issue legal notice to gbu team

இன்று மதியம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அதில் படத்தின் தயாரிப்பாளரோ அல்லது இயக்குனரோ இளையராஜாவின் நோட்டீஸ் குறித்து பதில் தருவார்களா என்று பார்ப்போம்.

அனுமதி பெறாமலும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் .பாடல்களைப் பயன்படுத்தி இருந்தால், அது தவறு என சமூக வலைதளங்களில் பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *