Jananayakan : GBU வினியோகஸ்தருக்கே ‘ஜனநாயகன்’ வினியோக உரிமை?

கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் Jananayakan. இப்படம் அடுத்த ஆண்டு 2026 பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
ஆனால், கடந்த சில வாரங்களாகவே இப்படத்தின் வியாபாரம் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகின. ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை இதுவரை இல்லாத அளவிற்கு விற்கப்பட்டதாக செய்திகள் பரவின.
தமிழக வினியோக உரிமையை வாங்கவும் கடும் போட்டி நிலவி இருக்கிறது. தயாரிப்பு நிறுவனம் சொன்ன விலையை வாங்கப் பலர் தயாராக இல்லை.
Jananayakan Theatre Rights
இதனிடையே, ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தமிழகத்தில் வெளியிட்ட வினியோகஸ்தரான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இப்படத்தை வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் நடித்து வெளிவந்த படங்களில், இதுவரை இல்லாத அளவிற்கு இந்தப் படத்திற்கான உரிமை 100 கோடி வரை பேசப்பட்டு, 90 கோடி அளவில் முடிக்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத் தகவல்.
அவ்வளவு தொகையை லாபத்துடன் வசூல் செய்ய 200 கோடி வசூலைத் தாண்ட வேண்டும். விஜய் நடித்து இதற்கு முன்பு வெளியான ‘தி கோட்’ படத்தின் தமிழக உரிமையையும் ராகுல்தான் பெற்றிருந்தார். அதன் விலை 50 டூ 60 கோடி மட்டுமே என்பது தகவல்.