Keerthy suresh : விஜய் தேவரகொண்டா ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் ‛கிங்டம்’. கவுதம் தின்னனூரி இயக்கத்தில், இந்த படத்தில் பாக்யஸ்ரீ போஸ் நாயகியாக நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து அடுத்ததாக, ரவுடி ஜனார்த்தனா என்கிற படத்தில் நாயகனாக நடிக்கிறார் விஜய் தேவரகொண்டா.
ரவிகிரண் கோலா இயக்குகிறார். இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்த படத்தில் நாயகியாக ருக்மணி வசந்த் நடிப்பார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில்,
தற்போது இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில், இப்படத்தின் தயாரிப்பு நிர்வாகி பேசும்போது, Keerthy Suresh உடன் இந்த படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்து விட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.