Lakshmi Manchu : இன்ஸ்டா! போன் ஹேக் – நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி

தெலுங்கு திரையுலகில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருபவர் நடிகை Lakshmi Manchu. பிரபல சீனியர் நடிகர் மோகன்பாபுவின் மகள்.
தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ள இவர் சோசியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவாக ரசிகர்களுடன் கலந்து உரையாடுபவர்.
தன்னைப் பற்றிய பதிவுகளை அடிக்கடி வெளியிடுபவர். ஆனால், சமீபகாலமாக தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் லட்சுமி மஞ்சு.
“ஆனால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை என்னாலும் கூட கையாள முடிகிறது. அதே சமயம் சில மர்ம நபர்கள் அவர்களின் தேவைக்கேற்றபடி என் கணக்கை பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர்.
இதை என்னால் தடுக்க முடியவில்லை. அதனால் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகும் பதிவுகளை பெரிய முக்கியத்துவம் கொடுத்து யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
Lakshmi Manchu Phone Hacked
அதில் பெரும்பாலும் நான் பணம் கேட்பதாக தான் அதிகம் செய்திகள் வருகின்றன. அப்படி யாரிடமாவது எனக்கு பணம் தேவை என்றால் நான் நேரடியாகவே கேட்டு வாங்கிக் கொள்கிறேன்.
இப்படி சோசியல் மீடியாவில் கேட்க மாட்டேன்” என்று தனது ட்விட்டர் கணக்கு மூலமாக இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார் லட்சுமி மஞ்சு.
அது மட்டுமல்ல தனது போன் நம்பரை கூட அவர்கள் ஹேக் செய்துள்ளார்கள் என்று கூறியுள்ள Lakshmi Manchu,
சமீபத்தில் ஒரு நைஜீரியன் நாட்டு நம்பரில் இருந்து தனக்கு ஒரு மெசேஜ் வந்ததாகவும், அதில் என்னுடைய மொபைல் போனும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனால், எனது மொபைல் போனிலிருந்து ஏதாவது வித்தியாசமான மெசேஜ்கள் வந்தால் கூட அதையும் புரிந்து கொண்டு தவிர்க்கவும் என்று விரக்தியுடன் கேட்டுக் கொண்டுள்ளார்.