Ravi Mohan : அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதா – ரவி மோகன் பதில்!

Ravi Mohan about entering politics

Ravi Mohan நடித்து வெளியான இறைவன், சைரன், பிரதர், காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் தோல்வியடைந்தது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா இயக்கி வரும் பராசக்தி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் ஸ்ரீ லீலா நாயகியாகவும், அதர்வா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள். இதுதவிர கராத்தே பாபு என்ற படத்திலும் நடிக்கிறார்.

இந்த நிலையில் சென்னையில் நடந்த அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரவி,

‛‛இந்த நிகழ்ச்சியில் பல அரசியல்வாதிகள் இருக்கிறீர்கள். அதேபோல் தமிழ் சினிமாவில் இருந்து பல நடிகர் நடிகைகள் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றுள்ளார்கள்.

Ravi Mohan about entering politics

இன்னும் சிலர் அரசியல்வாதிகளாக செயல்பட்டு வருகிறார்கள். அதைப்பார்த்து நீங்களும் அரசியலுக்கு வரப்போகிறீர்களா என்று இங்கு சிலர் என்னிடத்தில் கேட்டார்கள்.

என்னை பொறுத்தவரை எந்த காலத்திலும் நான் அரசியலுக்கு வரமாட்டேன். அதற்கெல்லாம் சான்ஸே இல்லை. தொடர்ந்து சினிமாவில் நடிகராக இருக்கவே நான் ஆசைப்படுகிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *