Sardar 2 : யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ்

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், கார்த்தி, ஆஷிகா ரங்கநாத், எஸ்.ஜே சூர்யா, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் Sardar 2.
இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைப்பாளராக இருந்தார். ஆனால், கடந்த சில நாட்களாக அவரை நீக்கிவிட்டு,
அவருக்குப் பதிலாக சாம் சிஎஸ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வந்தன.
ஆனால், தயாரிப்பு நிறுவனம் அதை உறுதி செய்யாமல் இருந்தது. இந்நிலையில் இன்று இப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது.
அதை முன்னிட்டு, படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். அதில் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது.