Yogibabu: நடிகர் யோகிபாபு மீது பரபரப்பு குற்றச்சாட்டு

Serious accusation on YogiBabu

சென்னையில் நேற்று கஜானா பட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் பேசிய அதன் தயாரிப்பாளர் ராஜா Yogibabu மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அவர் கூறியதாவது; இந்த படத்தில் நடித்த யோகிபாபு, பட பிரமோஷன் நிகழ்ச்சிக்கு வர மறுக்கிறார். இதற்கு தனியாக 7 லட்சம் கேட்கிறார். இது சரியா ? அவர் நடிக்கவே லாயக்கு அற்றவர்; இது ஒரு மோசமான செயல் என பேசினார்.

ஆனால், நடிகர் யோகிபாபு தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். அந்த படத்தின் தயாரிப்பாளர் சாம். இந்த ராஜா யார் என்றே தெரியாது.

Serious accusation on YogiBabu

Serious accusation on YogiBabu

பல ஆண்டுகளாக இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. யோகிபாபு மிகவும் பிசியாக நடித்து வருகிறார். ஒவ்வொரு நாளும் ஒரு ஊரில் நடித்து வருகிறார்.

இது போன்ற பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு சென்றால் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புக்கு பாதிப்பு வரும். அதனால் தயாரிப்பாளர் பல லட்சம் இழப்பைச் சந்திக்க நேரிடும்.

இதை படக்குழுவினர் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால்,  முடிந்தவரை அவர் நடிக்கும் பட நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *