அந்தரங்க வீடியோ வைரல் : Shruthi Narayanan மறுப்பு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் Shruthi Narayanan.
இவரின் அந்தரங்க வீடியோ என்று இணையத்தில் சில போட்டோக்கள், வீடியோக்கள் வைரலாகின.
அது உண்மையான வீடியோ தான் என்றும், போலி வீடியோ என்றும் இரண்டு விதமான கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
இதுபற்றி தன் இன்ஸ்டாவில், ‛‛ஒரே முகசாயல் கொண்ட இரண்டு பெண்களின் வீடியோவை பதிவிட்டு இதில் உண்மை யார், ஏ.ஐ யார் என கேட்டு, எது உண்மை என்று விளக்கும் விதமாக அந்த வீடியோ அமைந்துள்ளது. இதன்மூலம் தன் வீடியோ போலியானது என விளக்கி உள்ளார் ஸ்ருதி.
மேலும் மற்றொரு பதிவில், ‛‛மிகவும் கடனமான சூழலில் நான் உள்ளேன். நானும் ஒரு பெண் தான். எனக்கும் உணர்வுகள் உண்டு. இதை காட்டுத் தீ போல பரப்பாதீர்கள்.
உங்களுக்கும் தாய், சகோதரி, தோழி, காதலி இருக்கலாம். அவர்களுக்கும் என் போன்று தான் உடல் அமைப்பு உள்ளது” என Shruthi Narayanan கூறினார்.