Veera Dheera Sooran Review

Veera Dheera Sooran Review

Veera Dheera Sooran Review

நடிகர் : விக்ரம், எஸ்.ஜே.சூர்யா

நடிகை: துஷாரா விஜயன் , ஸ்ரீஜா ரவி

இயக்கம்: எஸ்யு அருண்குமார்

இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்

கதை

ஊர் பெரியவரான பிருத்விராஜ் வீட்டின் முன் பெண்மணி ஒருவர் தனது கணவரை நீங்கள்  மறைத்து வைத்துள்ளீர்கள் என தனது மகளுடன் வந்து சண்டை போடுகிறார். அந்தப் பெண்னை பெரியவர் மகனான சுராஜ் வெஞ்சரமுடு அடித்து விரட்டுகிறார்.

இதையடுத்து அந்த பெண் கணவர் அங்குள்ள காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்தார்.

அப்போது காவல் நிலையத்தில்  எஸ்பி, எஸ் ஜே சூர்யாவிடம் தன் மனைவியை, பெரியவர் ஏதோ செய்து விட்டதாக சொல்லி விரைவாக கண்டுபிடிக்கும்படி வேண்டுகிறார்.

ஏற்கனவே பெரியவர் மற்றும் அவரது மகன் சுராஜ் வெஞ்சரமுடு மீது முன் கோபத்தில் இருக்கும் எஸ்ஜே சூர்யா இதைப் பயன்படுத்தி, அந்த பெண்னை கொலை செய்துவிட்டு,

அந்த பழியை இவர்கள் மீது போட்டு அவர்களை  என்கவுண்டர் செய்ய திட்டம் போடுகிறார்.

இந்த விஷயம் பெரியவருக்கு தெரிந்து விடுகிறது. இதனால் மகன் சுராஜ் வெஞ்சரமுடுவை தலைமறைவாக இருக்கச் சொல்லிவிட்டு எஸ் ஜே சூர்யாவை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்.

அதற்காக, அந்த பகுதியில் மளிகை கடை வைத்து மனைவி துஷாரா விஜயன் மற்றும் குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வரும் விக்ரமின் உதவியை நாடுகிறார்.

திரைக்கதை

ஏற்கனவே விக்ரமுக்கு பெரியவர் செய்த உதவியால் விக்ரமும் இந்த வேலையை முடிப்பதாக சொல்லி ஆயுதங்களை வாங்கிக் கொண்டு செல்கிறார்.

அன்றைய தினம் ஊர் திருவிழா என்பதால் பொதுமக்கள் அனைவரும் கோவிலுக்கு சென்று விடுகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி  எஸ்ஜே சூர்யா கொல்ல திட்டம் போடுகிறார்.

அதேநேரம் பெரியவர், விக்ரமை வைத்து எஸ்ஜே சூர்யாவை முடிக்க திட்டம் தீட்டுகிறார். இவர்கள் இருவரின் திட்டமும் நிறைவேறியதா? இல்லையா என்பதே படத்தின் மீதி கதை.

Veera Dheera Sooran Review

இயக்கம்

வழக்கமான கதை தான் என்றாலும் அதை முடிந்த அளவு சுவாரஸ்யமாகவும், அதே நேரம் புதுமையாகவும் சொல்லி இருப்பது இயக்குநர் எஸ்யு அருண்குமாரின் திறமையை காட்டுகிறது.

ஒரு இரவுக்குள் நடக்கும் கதையை மூன்று மணி நேரத்துக்கு கிரிப்பிங் ஆக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

அதற்காக அவர் தேர்வு செய்துள்ள நடிகர்கள்  பர்பெக்டாக பொருந்தி உள்ளனர். திரைக்கதை வசனமும் நேர்த்தியாக எழுதியிருக்கிறார்.

விக்ரம்

விக்ரமின் நடிப்புக்கு தீனி போட்டுள்ள ஒரு சில இயக்குநர்களில் இனி அருண்குமார் இணைந்து விடுவார். பல காட்சிகளில் தனது அனுபவ நடிப்பால் ஸ்கோர் செய்கிறார் விக்ரம்.

காளியாக மாஸ் காட்டி மிரள வைத்துள்ளார். கிளைமாக்ஸ் கட்சியில் இடம் பெற்றுள்ள மதுரை வீரன் தானே.. என்ற தூள் பட பாடல் ஒலிக்கும்போது தியேட்டர் அதிர்கிறது.

எஸ் ஜே சூர்யா

போலீஸ் எஸ்பியாக நடித்துள்ள எஸ்ஜே சூர்யா தனது நடிப்பால் அந்த பாத்திரத்தை தாங்கிப் பிடிக்கிறார்.

அவருடைய டயலாக் டெலிவரி அந்த கேரக்டருக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

பெரியவராக வரும் பிருத்வி ராஜ் மற்றும் சுராஜ் வெஞ்சரமுடு வில்லத்தனத்தில் மிரட்டி உள்ளனர்.

துஷாரா விஜயன்

துஷாரா விஜயன் கதைக்கு மிகப்பெரிய பலம். காளி என்ற காளையை தனது கண்களால் அடக்கி விடுகிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயாக முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஸ்ரீஜா ரவி

அம்மாவாக வரும் ஸ்ரீஜா ரவி, பெரியவர் மனைவியாக வரும் மாலா பார்வதி மற்றும் நண்பனாக வரும் பாலாஜி ஆகியோர் தங்கள் பங்களிப்பை சிறப்பாக தந்துள்ளனர்.

ஒளிப்பதிவு

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகிறது. படம் முழுக்க இரவில் எடுக்கப்பட்டு இருந்தாலும் தனது லைட்டிங் மூலம் பகல் போல் காட்டி இருக்கிறார்.

இசை

ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் படியாக உள்ளது. பின்னணி இசையில் தனி முத்திரை பதிக்கிறார்.

Veera Dheera Sooran – வென்றான் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *