Actor Sri : மருத்துவர்கள் கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ – குடும்பத்தினர் அறிக்கை!
வழக்கு எண் 18 படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் actor sri. தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான மாநகரம் படத்திலும் இரு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருந்தார். ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு போன்ற படங்களில் நடித்தவர் கடைசியாக ‛இறுகப்பற்று’ படத்தில் நடித்தார். ஒருகட்டத்தில் இவருக்கு போதிய சினிமா வாய்ப்புகள் வரவில்லை. இதனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை…
