Mrunal Thakur: அல்லு அர்ஜுன் ஜோடியாகும் மிருணாள் தாகூர்
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், அட்லி இணையும் படத்தில் மூன்று நாயகிகள் நடிக்கப் போவதாக செய்திகள் பரவின. பாலிவுட் முன்னணி நடிகைகள் பலரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. கால்ஷீட் இல்லாத காரணத்தால் நடிக்க முடியாத சூழல் உருவானது. தற்போது Mrunal Thakur நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. விரைவில், ஜான்வி கபூர் ஒப்பந்தமாகலாம் என்று தெரிகிறது. மூன்றாவது நாயகியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.
