Vedhika: பழைய தமிழ் பாடல்கள் மிகவும் பிடிக்கும் – வேதிகா
முனி படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை Vedhika. இவர் தமிழ் தவிர கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது; எனக்கு பழைய தமிழ் பாடல்கள் மிகவும் பிடிக்கும். என்னை சந்திக்க வரும் நண்பர்களிடம் பழைய தமிழ் பாடல்களை பாடுவேன். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், எம்ஜிஆரின் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலை பாடினேன். இளையராஜாவின் சங்கத்தில் பாடாத கவிதை பாடல் மிகவும் பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
